அஸ்ஸாம் மாநிலம் பாண்டு கல்லூரியைச் சேர்ந்த இரு மாணவிகள் ஆட்டோவில் தங்களின் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். குவஹாத்தி மேல்கவுன் பகுதியை ஆட்டோ வந்தடைந்த நிலையில், மாணவிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த சக பயணி ஒருவர் இரு மாணவிகளுக்கு, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போதை ஊசி செலுத்தியுள்ளார்.
கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த அவலம்! - அஸ்ஸாமில் கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த அவலம்!
திஸ்பூர்: ஆட்டோவில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் இருவருக்கு வலுக்கட்டாயமாக போதை ஊசி செலுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரு மாணவிகள் ஆட்டோவிலிருந்து வெளியே குதித்துள்ளனர். அப்போது, மாணவிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், மாணவிகள் அருகில் உள்ள சஞ்சிவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், ஒரு மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றொரு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டபோதிலும் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மாணவிகளின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.