தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணிப்பூரில் ரூ.400கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் - நான்கு பேர் கைது

இம்பால்: மணிப்பூரில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை கடத்திய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

drug racket busted

By

Published : Aug 25, 2019, 2:47 PM IST


மணிப்பூர் மாநிலம் தெளபால் மாவட்டம், பேயூடெல் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மினி லாரி ஒன்றை வழிமறித்து சோதனை செய்தபோது, அதில் 100 அட்டைப் பெட்டிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மினி லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்ததில், ஓட்டுநர் பெயர் முகமது உசேன் என்பதும், சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் போதைப் பொருளான டபிள்யு.ஒய் மாத்திரைகள் அதில் இருந்தது என்பதும் தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.400 கோடி ஆகும்.

இதனையடுத்து, அவர் கொடுத்த தகவலின் பேரில் இம்பால் விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்ற முக்கிய கடத்தல்காரர்களான அயூப்கான்(41), எம்.டி அப்துல் ரசாக்(35), அப்துல் ரஹீம்(33) ஆகிய மூன்றுபேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ. 60 ஆயிரம் ரொக்கம், 100 அமெரிக்க டாலர்கள், இரண்டு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான மூன்று பேர்களில் ரஹீம் சர்வதேச கடத்தல்காரர் என்பதும், இந்தியா, வங்கதேசம் வழியாக போதை மாத்திரைகளை கடத்த முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details