ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் மதியழகன் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து, தீவிர சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி வீரமரணத்தை தழுவினார். ராணுவ வீரர் மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவராவார்.
இந்நிலையில், ராணுவ வீரர் மதியழகனின் குடும்பத்துக்கு தெலங்கானா ஆளுநர் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி பகுதியில் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.