தமிழ்நாடு

tamil nadu

கேரளாவில் பாதியாக குறைந்த குற்றங்கள்

By

Published : Apr 12, 2020, 2:32 PM IST

திருவனந்தபுரம்: திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு, கடத்தல், மோசடி, விபத்து என அத்தனை குற்றங்களும் கேரளாவில் குறைந்துள்ளது.

Kerala police  spread of coronavirus  State Crime Records Bureau  lockdown period  crime rate in Kerala  கேரளாவில் பாதியாக குறைந்த குற்றங்கள்  கேரள குற்ற ஆவண காப்பகம்  கோவிட-19 பாதிப்பு, கரோனா வைரஸ்
Kerala police spread of coronavirus State Crime Records Bureau lockdown period crime rate in Kerala கேரளாவில் பாதியாக குறைந்த குற்றங்கள் கேரள குற்ற ஆவண காப்பகம் கோவிட-19 பாதிப்பு, கரோனா வைரஸ்

புதிய கரோனா (கோவிட்-19) வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் (மார்ச்) 24ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு நாடு முழுமையான பூட்டுதலில் (லாக்டவுன்) உள்ளது.

இந்நிலையில் மாநிலத்தில் குற்றங்கள் கடுமையாக குறைந்துவிட்டதாக அம்மாநில காவலர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக மாநில குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில், “இந்தாண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 18 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகியிருந்தது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் அது 92 ஆக இருந்தது.

அதேபோல் கொள்ளை வழக்குகள் இரண்டு பதிவாகியுள்ளது. 2019ஆம் ஆண்டு இது 12 ஆக இருந்தது. கொலை வழக்குகள் கடந்தாண்டு 6 ஆக இருந்தது. தற்போது நான்காக குறைந்துள்ளது.

திருட்டு, பாலியல் வன்புணர்வு, கலவரம், மோசடி மற்றும் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் பெருமளவில் குறைந்துள்ளது. 2019ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சாலை விபத்துகள் வழக்கு 460 ஆக இருந்தது.

இது தற்போது 97 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 181 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், முழு அடைப்பு நேரத்தில் 15 சாலை விபத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளன” என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details