தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெட்டுக்கிளி தாக்குதல்: பூச்சிமருந்து தெளிக்கும் ட்ரோன்கள் முன்னோட்டம் - தமிழ் செய்திகள்

ஜெய்பூர்: ராஜஸ்தானில் முதன்முதலாக வெட்டுக்கிளிகள் கூட்டத்தை தடுக்க பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் ட்ரோன்கள் முன்னோட்டம் பார்க்கப்பட்டது.

ட்ரோன்கள் முன்னோட்டம்
ட்ரோன்கள் முன்னோட்டம்

By

Published : May 30, 2020, 4:27 PM IST

வெட்டுக்கிளிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முதன்முதலாக ராஜஸ்தானில் ட்ரோன்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து சோதனை செய்யப்பட்டது என அம்மாநில வேளாண்மைத் துறை அலுவலர் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

இந்த ட்ரோன்களில் 10 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்துகள் வரை நிரப்பலாம், மேலும் மருந்து தெளிக்கும்போது வெட்டுக்கிளிகளை வெவ்வேறு வழிகளில் சிதறடிக்க ஒருவகையான ஒலியை எழுப்புவதுபோல் இந்த ட்ரோன்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன்கள் 15 நிமிட பேக்-அப் கொண்டவை. இதனை ஒருமணி நேரம் பயன்படுத்தி முன்னோட்டம் பார்க்கப்பட்டது. இதனை வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்கள், மாநில வேளாண்மைத் துறையின் அலுவலர்கள் மேற்பார்வையிட்டனர்.

தற்போதுவரை ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் 334 இடங்களில் சுமார் 50,468 ஹெக்டேர் பரப்பளவில் வெட்டுக்கிளி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்னோட்டச் சோதனை வெற்றிகரமாக இருந்ததால் வெட்டுக்கிளிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 30 ட்ரோன்கள் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெட்டுக்கிளிகள் தாக்குதல் முன்னெச்சரிகை நடவடிக்கை - விவசாய அமைச்சர் அருண் சாஹூ

ABOUT THE AUTHOR

...view details