இமாச்சலப் பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் உள்ள திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா வீட்டின் அருகே ஆளில்லா விமானம் ஒன்று பறந்துள்ளது. இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று ஆளில்லா விமானத்தை காவல் துறையினர் கைப்பற்றினர்.
தலாய் லாமாவின் பாதுகாப்புக்கு பங்கம்? - வீட்டின் அருகே பறந்த ட்ரோன்! - Drone sighted near Dalai Lama's residence in Dharamshala
சிம்லா: திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா வீட்டின் அருகே பறந்த ஆளில்லா விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Drone
காவல் துறையினர் பறிமுதல் செய்த அந்த விமானம் தடயவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அந்த விமானத்தை ஜோஷ் இக்னாசியோ காரவெல்லா என்பவர் இயக்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா வீட்டின் அருகே உள்ள பகுதியில் ஆளில்லா விமானம் இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.