கேரளா மாநிலம் கொல்லம் வெந்தரில் உள்ள பள்ளி மைதானத்தில் சுற்றுலா பேருந்துகள் பஸ் ஸ்டண்ட் செய்தன. இதில் இரண்டு பேருந்துகள் வட்டமாக ரவுண்ட் அடிக்க நடுவிலிருந்த சுற்றுலா மாணவர்கள், கைத்தட்டி உற்சாகம் அளித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதனையடுத்து, இந்த இரண்டு பேருந்துகளை கைப்பற்றிய போக்குவரத்து காவல் துறையினர், பஸ் ஸ்டண்டில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.