டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஜூன் 20ஆம் தேதி வெளிநாட்டுப் பணம் கடத்துவதாக வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து வருவாய்ப் புலனாய்வு அலுவலர்கள் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
டெல்லியில் ரூ. 1.27 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் ரூ. 1.27 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை கடத்த முயன்ற நான்கு பேரிடமிருந்து வருவாய்ப் புலனாய்வு அலுவலர்கள் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
அப்போது பாங்காக் செல்லவிருந்த நான்கு பேரை விசாரித்தபோது அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக ரூ. 1.27 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் நான்கு பேரையும் சுங்கச் சட்டம் 1962இல் கீழ் கைது செய்தனர்.