தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 18, 2020, 10:53 PM IST

ETV Bharat / bharat

விண்வெளி உடையணிந்து நூதனப் போராட்டம் - எதற்குத் தெரியுமா?

புதுச்சேரி: லாஸ்பேட்டை சாலைகளைச் சீரமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் விண்வெளியில் நடக்கும் உடையணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம்
சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம்

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள சாலைகள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக முற்றிலும் சேதமடைந்ததன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அந்த சாலை வழியாக நடந்து செல்லமுடியாமல் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அதன் நிர்வாகி ஆனந்தன் தலைமையில் விண்வெளியில் நடக்கும் உடையணிந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது அசோக் நகர், பாரதிதாசன் நகர் உள்ளிட்ட நகரின் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும் என அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம்

இதையும் படிங்க:நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ‘தர்பார்’ ஓடும் திரையரங்குகள் முன்பு போராட்டம்’

ABOUT THE AUTHOR

...view details