பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கியூஆர்எஸ்ஏஎம் எதிர்வினை ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. இந்தவகை ஏவுகணைகள் வான்வழி இலக்குகளை துல்லியமாகவும், மிக விரைவாகவும் தாக்கக் கூடியவை. அவற்றைப் பரிசோதனை செய்யும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.
அதனடிப்படையில், ஒடிசா கடற்கரை சண்டிபூரில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இன்று (நவ. 17) பிற்பகல் 3:42 மணியளவில் நடைபெற்ற இந்தப் பரிசோதனையில், கியூஆர்எஸ்ஏஎம் ஏவுகணை ஆளில்லா விமானத்தை இலக்காக கொண்டு ஏவப்பட்டது. அதன்படியே ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி பரிசோதனை வெற்றிபெற்றது.