தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லே பகுதியில் புதிதாக கரோனா பரிசோதனை மையம் திறப்பு!

காஷ்மீர்: லடாக்கில் கரோனா‌ தொற்று பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, லே பகுதியில் உள்ள DIHAR மையம் வளாகத்தில் கரோனா பரிசோதனை மையத்தை டி.ஆர்.டி.ஒ அமைத்துள்ளனர்.

rdo
rdo

By

Published : Jul 23, 2020, 9:57 PM IST

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

தினந்தோறும் மருத்தவ முகாம்களில் ஆயிரக்கணக்கானோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அறிகுறிகள் இருப்போர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், லடாக் பிரதேசத்திலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,206ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, டிஆர்டிஒ சார்பில் புதிதாக கரோனா பரிசோதனை மையம் ஒன்று லே பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை‌ இன்று (ஜூலை23) லடாக் துணை நிலை ஆளுநர் ஆர் கே மாத்தூர் திறந்து வைத்தார்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த கரோனா பரிசோதனை மையத்தில் ஒரு நாளைக்கு 50 மாதிரிகள் வரை பரிசோதிக்கப்படும். அதே போல், எதிர்க்காலத்தில் வைரஸ் தொடர்பாக வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் உபயோகமாக இருக்கும்.

மேலும், சோதனை மையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், சுற்றுச்சூழலில் மாசு கட்டுப்பாட்டை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் துணைநிலை ஆளுநருக்கு ஆராய்ச்சியாளர்கள், சுகாதார துறை ஊழியர்கள் எடுத்துரைத்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details