தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வாகன ஓட்டிகளிடம் கட்டாய வசூல் செய்வதை கைவிட வேண்டும்' - திராவிடர் கழகம் போராட்டம்! - புதுச்சேரி மாநிலம்

புதுச்சேரி: வணிக நிறுவனங்கள், வாகனங்கள் மீது கட்டாய வரி வசூலில் ஈடுபடும் புதுச்சேரி அரசைக் கண்டித்து, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்பினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Dravidian party protest
Dravidian party protest

By

Published : Jun 29, 2020, 9:27 PM IST

புதுச்சேரியில் கரோனா தொற்று நெருக்கடியான நேரத்தில், மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய புதுவை அரசு, அதற்கு மாறாக வாகனத்தில் போவோர், வருவோர், கடை நடத்தும் வணிகர்களிடம் கட்டாய வசூலில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக காவல் துறை, உள்ளாட்சித் துறை ஊழியர்களை நிர்ப்பந்திக்கும் ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையை, கைவிட வலியுறுத்தியும் புதுச்சேரி திராவிடர் கழகத்தினர் நகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் உள்ளிட்ட அமைப்பினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தின்போது, நகராட்சியின் வரி ரசீது மூலம் முகக்கவசம் அணியதோர், இருசக்கர வாகன ஓட்டிகள் மீது கட்டாய வரி வசூலில் ஈடுபடுவதை அரசு கைவிடவேண்டும் என முழக்கமிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details