இ.ஐ.ஏ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020ஐ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்த வரைவு அறிக்கை குறித்து பல்வேறு ஐயப்பாடுகளை முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரும், நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடித்தில் அரசு கொண்டுவரும் திட்டங்களில் மக்களின் குரலுக்கு முக்கியத்துவத்தை குறைக்கும் விதமான அம்சங்கள் வரைவில் உள்ளன எனவும் பொது கேள்விக்கான நோட்டீஸ் காலம் மிகக்குறைவாக உள்ளதாகவும் இந்தக் கடிதத்தில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.