தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெளியில் வந்த உடன் தேசிய பாதுகாப்பு சட்டம்: டாக்டர் கஃபீல் கானுக்கு தொடரும் சோதனை - கஃபீல் கானுக்கும் உத்தரப் பிரதேச மருத்துவர்

லக்னோ: குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் பிணையில் வெளிவந்த மருத்துவர் கஃபில் கான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் தொடுக்கப்பட்டுள்ளது.

KK
KK

By

Published : Feb 14, 2020, 3:23 PM IST

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று, சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாகக் கூறி கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் என்பவர் கடந்த ஜனவரி 30ஆம் தேதி மும்பையில் கைது செய்யப்பட்டார்.

கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற கஃபீல் கான் வன்முறையைத் தூண்டும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி நேற்று உத்தரப் பிரதேச சிறப்புக் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் பிணை பெற்று கடந்த திங்கள் கிழமை வெளியே வந்த டாக்டர் கஃபீல் கான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உத்தரப் பிரதேச காவல் துறையினர் தொடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் சார்பில் கண்டனக் குரல் எழுப்பப்பட்டது.

கஃபீல் கானுக்கும் உத்தரப் பிரதேச அரசுக்கும் ஏற்கனவே மோதல் போக்கு இருந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின்போது அங்கு தலைமை மருத்துவராக பணியாற்றியவர் கஃபீல் கான் குழந்தைகள் உயிரிழப்புக்கு மருத்துவமனையில் நிகழ்ந்த மின்வெட்டு, ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடுதான் காரணம் என்று அறிக்கை கொடுத்தது அரசுத் தரப்பைக் கோபப்படுத்தியது. இதன் காரணமாக யோகி ஆதித்தியநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு இவ்வாறு நடவடிக்கைகளை எடுத்தவருவதாக எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க:'கட்சியின் கொள்கையில் மாற்றம் வேண்டும்' - காங்கிரஸ் தலைவர்

ABOUT THE AUTHOR

...view details