மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரநிலை சிகிச்சைக்கான நெறிமுறையை காணொலி காட்சி மூலம் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கிவைத்தார். அப்போது பேசுகையில், ''நவீன மருத்துவம் தனது பலன்களைக் கொண்டுள்ளது. இதன்மூலம் கிடைக்கக்கூடிய மருந்துகள் மூலம் மக்களின் வாழ்க்கை மேம்பட்டுவருகிறது. ஆனால் ஆயுர்வேதம் என்பது நமது நாட்டின் பண்டைய கால அறிவியலாகும். அதனை ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி என்றே பலரும் கூறுகிறார்கள்.
அந்த அறிவினை உலகிற்கு முன்வைத்து விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி புத்துயிர் கொடுக்க வேண்டும். கரோனா சூழலிலும், நான் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பல விசாரணை மேற்கொண்டேன். அது இன்றைய காலத்திற்கும் ஏற்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.