தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம் குறித்த சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பு!

டெல்லி : இந்தியா முழுவதும் கடந்த மூன்று நாட்களில் கோவிட்-19 பரவல் இரட்டிப்பு விகிதம் 12.6 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

Doubling rate of COVID-19 cases now 12.2 days:  Dr Harsh Vardhan
கோவிட்-19 நிலவரம் குறித்த சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பு!

By

Published : May 14, 2020, 12:27 PM IST

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 'இந்தியா முழுவதும் மொத்தம் 74 ஆயிரத்து 281 பேர் கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரத்து 386 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றுநோயால் 2 ஆயிரத்து 415 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 3 ஆயிரத்து 525 பேர் கரோனா பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். கடந்த 14 நாள்களில், கோவிட்-19 பரவல் விகிதம் 11% ஆக இருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் 12.6 விகிதமாக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 3.2% விகிதமும், குணமடைந்தோர் விகிதம் 32.8% விகிதமும் உள்ளது.

நேற்றைய நிலவரப்படி, கோவிட்-19 நோயாளிகள் 2.75% தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்துள்ளனர். வென்டிலேட்டர்களில் 0.37% பேரும், ஆக்ஸிஜன் உதவியோடு 1.89% பேரும் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் கோவிட்-19 கண்டறிதலை நடத்த 352 அரசு ஆய்வகங்கள், 140 தனியார் ஆய்வகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வகங்கள் மூலம் தற்போது ஒரு நாளைக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 18 லட்சத்து 56 ஆயிரத்து 477 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 94 ஆயிரத்து 708 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், தாத்ரா நகர் ஹவேலி, கோவா, சத்தீஸ்கர், லடாக், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் கோவிட்-19 பாதித்த புதிய வழக்குகள் பதிவாகவில்லை. மேலும், டையூ மற்றும் டாமன், சிக்கிம், நாகலாந்து, லட்சத்தீவு ஆகியப் பகுதிகளில் இதுவரை எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

மத்திய அரசு இதுவரை மாநிலங்களுக்கு 78 லட்சத்து 42 ஆயிரம் என்-95 ரக முகக்கவசங்களை விநியோகித்துள்ளது. 42 லட்சத்து 18 ஆயிரம் பாதுகாப்புக் கவசங்களை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 1 லட்சத்து 79 ஆயிரத்து 882 படுக்கைகள் (1 லட்சத்து 60 ஆயிரத்து 610 - தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள்,19 ஆயிரத்து 272 ஐ.சி.யூ படுக்கைகள்) கொண்ட 900 சிறப்பு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 படுக்கைகள் கொண்ட 2,040 கோவிட்-19 சுகாதார நிலையங்கள் (1 லட்சத்து 19 ஆயிரத்து 340 - தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 10 ஆயிரத்து 349 ஐ.சி.யூ படுக்கைகள்) அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்றன.

மேலும், 8 ஆயிரத்து 708 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களும், 4 லட்சத்து 93 ஆயிரத்து 101 படுக்கைகள் கொண்ட 5 ஆயிரத்து 577 பராமரிப்பு மையங்களும் இப்போது மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களிடமும் பரிசோதனை மேற்கொள்வது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வீட்டுக்கு வழங்குவது; மேலும் பாதிக்கப்படாத மாவட்டங்களில் கடும் சுவாச நோய்த்தொற்றுகள் (Severe Acute Respiratory Infections - SARI) மற்றும் இன்ஃப்ளூயன்ஸா நோய் (Influenza Like Illness - ILI) போன்ற தொற்றுப் பரவல் தடுப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நிலவரம் குறித்த சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பு!

நான்காம் கட்ட ஊரடங்கிற்கான புதிய தளர்வுகளுடன் புதிய வழிகாட்டுதல்களைத் தயாரித்து வரும் பணியில், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாக, அரசாங்கத்தின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க :'கரோனா இயற்கையானதல்ல' - நிதின் கட்கரி

ABOUT THE AUTHOR

...view details