மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008இல் திருத்தம்செய்து 2020 மே 15ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது.
செல்லுபடியாகாத பாஸ்டேக் அட்டையுடன் வரும் வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்!
டெல்லி: தேசிய சுங்கச்சாவடிகளில் செல்லுபடியாகாத பாஸ்டேக் அட்டையுடன் வரும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.
செல்லுபடியாகாத பாஸ்டேக் அட்டையுடன் வரும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம்
அதில், சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்களில் பாஸ்டேக் அட்டை ஒட்டாமல், அவ்வாறு ஒட்டியிருக்கும் அட்டை செல்லுபடியாகாமல் இருந்தால் அந்த வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தைவிட, இரண்டு மடங்கு வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கால் கடும் இழப்பு: 6 மாதங்களுக்கு சுங்கக் கட்டண வசூலை நிறுத்தக் கோரிக்கை!