இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2005ஆம் ஆண்டு அமல்படுத்திய புதிய விதிமுறைகளின்படி ஏர்டெல், வோடஃபோன், பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களின் மொத்த வருவாய் திருத்தியமைக்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் டெலிகாம் நிறுவனங்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை குறிப்பிட்டு தொலைத்தொடர்பு சேவையில்லாத GAIL போன்ற அரசு நிறுவனங்களும், இந்த வகையில் நான்கு லட்சம் கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு துறை வலிறுத்தியது. இதை எதிர்த்து, பொது துறை நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன.
கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது, பொது துறை நிறுவனங்களின் நிலுவைத் தொகை இவ்வளவு அதிகமானது ஏன் என்று அரசு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த தொகையை திரும்ப பெற்றுக்கொள்வது குறித்தும் பரிசீலனை செய்யுமாறும் கேட்கொண்டனர்.
இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருன் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, எஸ். அப்துல் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இவ்வழக்கு விசாரணைக்குவந்தது. இன்று தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, புதிய விதிமுறைகளின்படி GAIL போன்ற தொலைத்தொடர்பு சேவையில்லாத அரசு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் 96 விழுக்காடு தொகையை செலுத்த வேண்டாம் என தெரிவித்தார்.
அதை ஏற்றுகொண்ட நீதிபதிகள், டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவகை தொகைக்கு ஏற்ப உத்தரவாதங்களை சமர்பிக்கவும் உத்தரவிட்டனர். அப்போது வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "ஏற்கனவே இது தொடர்பாக ரூ. 7,000 கோடியை தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு செலுத்தியுள்ளோம். தற்போது நெருக்கடியான நிலையால் எந்தவொரு வங்கி உத்தரவாதத்தையும் அளிக்கக்கூடிய நிலையில் நிறுவனங்கள் இல்லை" என்றார்.
இதை கண்டித்த நீதபதிகள், இந்த ஊரடங்கு காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பணத்தை ஈட்டுக்கின்றன என்றனர். மேலும், டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூலை மூன்றாம் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை இழக்கும் சர்வதேச ரேட்டிங் நிறுவனங்கள்