சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் இதுவரை 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கரோனா வைரசைக் கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரங்கின் போது வீட்டை விட்டு வராமல், அத்தியவசியப் பொருள்களை வாங்க மட்டும் வீட்டில் கொஞ்சம் திறமான நபர் வந்து வாங்கிக் கொள்ளலாம் எனவும் வீட்டில் யாருக்காவது இருமல், தும்மல், காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்த ஊரடங்கில் எப்படி நேரங்களை செலவிட வேண்டும் என தவித்துவருகின்றனர். அந்த தாகத்தை தணிப்பதற்கான சில டிப்ஸ் இதோ...!
குடும்பதுடனான பொன்னான நேரமிது...!
தினசரி நாம் வேலைக்காக வீட்டிலிருக்கும் நபர்களை கவனிக்க முடியவில்லை என்று ஓடிக்கொண்டிருந்த காலத்தை கறைக்கதான் இந்த பொன்னான நேரம் வந்திருக்கிறது என்றெண்ணி, இந்த நேரத்தில் உங்களது குடும்பத்தாருடன் மகிழ்ந்திருங்கள்.
இந்த நேரங்களில் இசை கேட்பது, வாசிப்பது, தோட்டத்தை பாராமரிப்பது தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை குடும்பத்துடன் பார்ப்பது உள்ளிட்டவற்றை செய்து மனங்களை குளிர்வித்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி நல்ல உணவுகளை உட்கொண்டு வயிற்றைக் குளிர்செய்ய வேண்டும்.
உண்மைக்கு எஸ் சொல்லு..! புரளிக்கு குட் பாய் சொல்லு...!