மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பிவைத்தார். ஒரு நகலை ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு இரவு 1.05 மணிக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார்.
இன்னும் ஆறு மாதத்தில் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவரது ராஜினாமா கடிதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரசில் மம்தா பானர்ஜி மருமகனுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் பிரசாந் கிஷோரின் தலையீடு ஆகியவற்றால் சுவேந்து அதிகாரி அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே பிரசாந்த் கிஷோரின் செயல்பாட்டை விமர்சித்தும் வந்துள்ளார்.
இதன் காரணமாகவே ராஜினாமா செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்த மறுநாளே டிஎம்சி (TMC) கட்சியின் மூத்தத் தலைவர் செளகதா ராய், தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை நடத்த அவரது வீட்டிற்குச் சென்றும் தோல்வியில் முடிந்தது.