தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பணக்கார நாடாக வேண்டாம், ஆரோக்கியமான நாடாக வேண்டும்' - ஆரோக்கியமான நாடு

டெல்லி: இந்தியா பணக்கார நாடாக வேண்டாம், ஆரோக்கியமான நாடாக வேண்டும் என மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.

திருச்சி சிவா

By

Published : Jul 1, 2019, 2:55 PM IST

நாட்டில் நிலவும் வறட்சி குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் எழுந்தது. அப்போது திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், " பருவமழை தோல்வியடைந்து, விவசாயத்தை நம்பி இருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றிவிட்டது. காவிரியில் தண்ணீர் இல்லை. இதன் பிறகும் வறண்ட நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால் நிலைமை மேலும் மோசமாகும்" என்றார்.

மக்களவையில் சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் பேசுகையில், "சட்ட ஆணையம் ஆணவ கொலை குறித்து பரிந்துரைத்துள்ள மசோதவை சிறிதும் தாமதப்படுத்தாமல் உடனடியாக சட்டமாக இயற்றிட வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details