தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வேதனையில் இருக்கிறோம்... அரசியல் செய்ய வேண்டாம்' - பாஜகவுக்கு கெஜ்ரிவால் அறிவுரை - நிர்பயா பாலியல் வழக்கு

டெல்லி: நிர்பயா வழக்கு விவகாரம் தொடர்பாக அரசியலில் செய்யாமல், இதுபோன்ற வழக்குகளில் விரைவாக நீதி கிடைக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Don't do politics over Nirbhaya case: Kejriwal to BJP &  Disappointed with courts, govt: Nirbhaya's mother
Don't do politics over Nirbhaya case: Kejriwal to BJP & Disappointed with courts, govt: Nirbhaya's mother

By

Published : Jan 18, 2020, 8:20 AM IST

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், "நான்கு குற்றவாளிகளை தூக்கிலிட தாமதமானதுக்கு ஆம் ஆத்மி அரசு காரணம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற பிரச்னையில் அரசியல் செய்வது வருத்தமாக இருக்கிறது. குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படுவதை உறுதிசெய்ய, ஒன்றிணைந்து செயல்பட வேண்டாமா?

ஆறு மாதங்களுக்குள் இதுபோன்ற மிருகங்கள் தூக்கிலிடப்படுவதை உறுதிசெய்ய நாம் கைகோர்க்க வேண்டாமா? ஆனால், அதை விட்டுவிட்டு, அதைப் பற்றி பேசி அரசியல் செய்கிறீர்கள். எங்கள் பெண்களுக்கு பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவோம் என நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் குற்றவாளிகளின் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், ஆம் ஆத்மி அரசின் கீழ் வரும் சிறைத் துறை ஏன் தூங்கியது? என்று கேட்டிருந்தார்.இதே குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் முன்வைத்தார்.இதற்குப் பதிலளிக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ட்விட்டர் பதிவு அமைந்துள்ளது.

இதையும் படிங்க: 'என் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும்' -நிர்பயா குற்றவாளி உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details