இந்திய, சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவம் மோதிக் கொண்டதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ராகுல் தொடர் கேள்விகளை எழுப்பி பிரதமர் மோடியை விமர்சித்துவருகிறார். இந்நிலையில், இந்திய எல்லை பகுதிக்குள் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதா? அச்சப்படாமல் உண்மையை சொல்ல வேண்டும் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சீன விவகாரத்தை பொறுத்தவரை அரசு மற்றும் ராணுவத்தின் பக்கமே ஒட்டு மொத்த நாடும் நிற்கிறது. ஆனால், முக்கியமான கேள்விக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை. நமது எல்லை பகுதிக்குள் யாரும் ஊடுருவவில்லை என பிரதமர் ஒரு சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
ஆனால், சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக லடாக் மக்கள், ஓய்வுபெற்ற ராணுவ தளபதிகள் தெரிவிக்கின்றனர். செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட புகைப்படங்கள் இதனை உறுதி செய்கின்றன. மூன்று இடங்களில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.