தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

“கமல்நாத்தின் பேச்சுகளை ஊக்குவிக்காதீர்கள்”- ராகுல் காந்தி - ராகுல்காந்தி

கமல்நாத்தின் பேச்சுகளை ஊக்குவிக்காதீர்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Rahul Gandhi on Kamal Nath  Don't appreciate the language Kamal Nath used: Rahul  Rahul  கமல்நாத்தின் மொழிகளை ஊக்குவிக்காதீர்கள்  ராகுல்காந்தி  கமல்நாத், இமார்த்தி தேவி
Rahul Gandhi on Kamal Nath Don't appreciate the language Kamal Nath used: Rahul Rahul கமல்நாத்தின் மொழிகளை ஊக்குவிக்காதீர்கள் ராகுல்காந்தி கமல்நாத், இமார்த்தி தேவி

By

Published : Oct 20, 2020, 4:49 PM IST

வயநாடு : காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.,யுமான ராகுல் காந்தி, மூன்று நாள்கள் பயணமாக கேரள மாநிலம் வயநாட்டுக்கு திங்கள் கிழமை (அக்.19) தனி விமானத்தில் சென்றார்.

கோழிக்கோடு பகுதியில் நிலச்சரிவில் வீடுகள், உடைமைகளை இழந்த மக்களுக்கு வீடுகள் வழங்கிய அவர், அதன் பின்னர் வயநாடு சென்றார். இந்நிலையில் இன்று (அக்.20) ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கமல்நாத் என் கட்சியை சேர்ந்தவர்தான், எனினும் நான் தனிப்பட்ட முறையில் இதுபோன்ற பேச்சுகளை விரும்புவதில்லை; ஊக்குவிப்பதும் இல்லை. இது துரதிருஷ்டவசமானது” என்றார்.

முன்னதாக மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், பாஜக பட்டியலின வேட்பாளர் இமார்த்தி தேவியை, தரக்குறைவான சொற்களை உபயோகித்து விமர்சித்தார். இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் ராகுல் காந்தியின் தற்போதைய பேச்சு அமைந்துள்ளது.

இதையும் படிங்க: கமல்நாத்தின் அவதூறு விமர்சனம்; மன்னிப்பு கேட்க காங்கிரஸ் மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details