தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் கழுதை சந்தை! - மேல்கான் கிராமத்தில் காலநடைகள் சந்தை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மேல்கான் கிராமத்தில் மிகப்பெரிய அளவில் கால்நடைகள் சந்தை நடைபெற்றது.

Donkey market
Donkey market

By

Published : Dec 27, 2019, 8:16 PM IST

மகாராஷ்டிரா நான்டெட் மாவட்டத்தில் உள்ள மேல்கான் கிராமத்தில் கால்நடைச்சந்தை நடைபெற்றது. இந்தச் சந்தையில் பல்வேறு விலங்குகள் விற்கப்பட்டாலும் சிறப்பம்சம் என்பது இங்கு விற்கப்படும் கழுதைகள்தான். ஜெஜுரி, மதி, சோனாரி உள்ளிட்ட பகுதிகளில் கழுதைச் சந்தை நடைபெற்றாலும் இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய கழுதைச் சந்தையாகப் பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மட்டுமில்லாமல் குஜராத், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் இந்தச் சந்தையில் பங்கேற்று கழுதைகளை வாங்கிச் செல்கின்றனர்.

ஒஸ்மனாபாத்தைச் சேர்ந்த பாபு காலி என்ற வியாபாரி, கழுதை ஜோடிகள் 60,000 முதல் 70,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். முழுப் பணத்தை செலுத்தாமல் முன்பணம் மட்டுமே கொடுத்துவிட்டு கழுதைகளை வணிகர்கள் வாங்கிச் செல்வர்.

கழுதை சந்தை

அடுத்தாண்டு நடக்கும் சந்தையில் மீதிப்பணத்தை கொடுத்தால் போதுமானது. இம்முறையை இந்தச் சந்தையில் வணிகர்கள் கடைப்பிடித்துவருவது பல்வேறு தரப்பினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் இந்தச் சந்தை காலம்காலமாக நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: உயிரோடு இருக்கும்வரை சி.ஏ.ஏ.வை அனுமதிக்க மாட்டேன் - மம்தா சூளுரை

ABOUT THE AUTHOR

...view details