உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நேற்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இதில் பிரதமர் கலந்துகொண்டு கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று புதிய ராமர் கோயிலுக்கு ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா என்ற அறங்காவல் அமைப்பு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. கோயில் கட்டுமான பணிகள், நிதி, நிர்வாகம் ஆகியவற்றை இந்த அறங்காவல் குழு மேற்கொள்கிறது.
அதன்படி, புதிய கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியையும் இந்த குழு மேற்கொண்டுவருகிறது. தற்போதுவரை சுமார் 41 கோடி ரூபாய் நிதி கோயில் கட்டுமானத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அரங்காவல் குழுவின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார். மார்ச் 25ஆம் தேதி கரோனா லாக்டவுனுக்கு முன்னர் 4.60 கோடி ரூபாய் நிதி வசூலாகியிருந்த நிலையில், தற்போது அது 41 கோடியாக அதிகரித்துள்ளதாக குழு தெரிவிக்கிறது.