கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நான்காம் கட்டமாக சில தளர்வுகளுடன் மே 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் சில தளர்வுகளை அமல்படுத்தியதைத் தொடர்ந்து இந்தியாவில் வரும் திங்கள்கிழமை (மே 25) முதல் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து விமானங்களின் கட்டணங்கள் குறித்துப் பேசிய மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, "உள்நாட்டு விமான சேவைக் கட்டணங்களைக் கட்டுக்குள் வைப்பதற்காக ஏழுவிதமான கட்டணங்களை நிர்ணயித்துள்ளோம்" எனக் கூறினார்.