புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் ஏனழ மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் மோகன். செல்ல பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், தனது இல்லத்தில் பொமரேனியன் நாய் ஒன்றை வளர்த்துவந்தார்.
இந்நிலையில் அந்தப் பாதையாக சென்றவர்களை அந்நாய் குரைத்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், விஷயம் கலந்த பிரியாணியை நாய்க்கு கொடுத்துள்ளனர். அதனைச் சாப்பிட்ட நாய் சிறிது நேரத்தில் இறந்துபோனது. இதனால் அதிர்ச்சியடைந்த மோகன், இதுகுறித்து உடனே காவல் துறையினருக்கு புகார் அளித்தார்.