மங்களூரு: 10 அடி தண்ணீர் உள்ள கிணற்றில் விழுந்த நாயை நீச்சல் தெரியாமல் உள்ளே இறங்கி காப்பாற்றிய பெண்மணியின் காணொலி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.
பலரால் பேணிக்காக்க முடியாத தெருநாயை, மனித உணர்வுடன் காத்து பிழைக்க வைத்திருக்கிறார் பெண் ஒருவர். இரவு நேரத்தில் சண்டையிட்டதில், அருகில் இருந்த கிணற்றில் விழுந்துள்ளது ஒரு தெருநாய். ஊர் மக்கள் கூடி நாயைக் காப்பாற்ற பல மணி நேரம் போராடியும், அப்போராட்டம் பலனளிக்கவில்லை.
முருகன் அவதாரம் எடுத்த யோகிபாபுவின் 'காக்டெய்ல்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
இது குறித்து தகவல் தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் 40 வயது பெண்மணி ரஜினி தாமோதர் ஷெட்டி. 10 அடி தண்ணீர் இருந்த கிணற்றில், நீச்சல் தெரியாத நிலையில், ஒற்றை 'கை' மீது மட்டுமே நம்பிக்'கை' வைத்து, உள்ளே இறங்கி நாயைக் காப்பாற்றினார். இவரின் இந்த வீரதீரச் செயலை ஊர் மக்கள் மெச்சி பாராட்டிச் சென்றனர்.
“நான் கிணற்றில் இறங்கும்போது, நாய் பயத்துடன் இருந்தது. அதை உயிரிழக்க விடக்கூடாது, எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று எண்ணினேன். நீச்சல் தெரியாததால் பலர் என்னை தடுத்தும், அதனைக் காப்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது” இவ்வாறு ரஜினி கூறியிருக்கிறார்.
திருமணமான 12 நாளில் மணவாழ்க்கையை முறித்த பமீலா ஆண்டர்சன்!
இல்லத்தரசியான ரஜினி தினமும் 150 நாய்களுக்கு இறைச்சியுடன் உணவளித்துவருகிறார். மேலும் 14 தெருநாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து, தன்னுடன் வைத்து கவனித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு ரஜினி தாமோதர் ஷெட்டி ஒரு சான்று.
தனது உயிரை துச்சமென மதித்து, நாயின் உயிரைக் காப்பாற்றிய தாய்! வைரல் காணொலி