தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 2, 2019, 10:32 AM IST

ETV Bharat / bharat

மருத்துவர்களின் 24 மணி நேர வேலைநிறுத்தம்: புறநோயாளிகள் பாதிப்பு

டெல்லி: தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

doctors

தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஜூலை 29ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும், மேலும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள 'எக்ஸிட் தேர்வு' ரத்து செய்யப்பட வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கைவைத்தன.

ஆனால், தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படவுள்ளது. இதன் காரணமாக மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின்போது அதிமுக வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும் எனவும், எக்ஸிட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மருத்துவர்கள் நாடு முழுவதும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தொடங்கினர்.

இந்த மசோதா திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேறியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதையடுத்து இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள், சப்தர்ஜிங் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் உள்பட நாட்டின் பல பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று 24 மணிநேர வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.

இந்த நிலையில், இன்று அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறவரும் புறநோயாளிகளின் நிலை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

டெல்லியில் பல பகுதிகளில் மருத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று நடைபெறவிருந்த அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டு, அவசர பிரிவு நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அங்குள்ள குறைந்தபட்ச ஊழியர்கள், பயிற்சி மருத்துவர்கள், அறுவை சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details