தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருச்சூர் விசாரணைக் கைதியின் உடற்கூறாய்வு அறிக்கை: மருத்துவர்கள் வெளியீடு! - திருச்சூரில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம்

திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே பவரட்டியில் காவலில் வைக்கப்பட்டு உயிரிழந்த விசாரணைக் கைதியின் உடற்கூறாய்வு அறிக்கையை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

திருச்சூரில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் அறிக்கை

By

Published : Oct 4, 2019, 8:08 AM IST

குருவாயூரைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கஞ்சா வைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருச்சூர் மாவட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று அவரை கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது ரஞ்சித்துக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் ரஞ்சித்தின் உடற்கூறாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த மருத்துவ அறிக்கையில், ரஞ்சித்தின் தலை, தோள் ஆகிய பகுதிகளில் அதிக உள்காயம் இருந்ததாகவும் மேலும் அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் - ரூம் போட்டு அடித்த பாதிக்கப்பட்ட 8 பேர்!

ABOUT THE AUTHOR

...view details