இமாச்சல்பிரதேசத்தில் உள்ள மாண்டி நகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு வயிற்று வலி எனக் கூறி 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வயிற்று பகுதியை ஸ்கேன் செய்ய அறிவுறுத்தினர்.
அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை பின்னர், அந்த நோயாளியும் வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து வந்து ரிப்போர்ட்டை டாக்டர்களிடம் காட்டினார். அதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் அவர் வயிற்றுக்குள் எட்டு ஸ்பூன்கள், இரண்டு ஸ்க்ரூ டிரைவர்கள், இரண்டு டூத் பிரஷ்கள், ஒரு கத்தி ஆகியவை இருந்தன.
இவை அனைத்து வயிற்றுக்குள் எப்படி சென்றன என டாக்டர்கள் கேட்டதற்கு அவர் ஒன்றும் சொல்லாமல் விழித்திருக்கிறார். இதையடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த பொருட்களை அகற்றினர்.
இதுபற்றி அறுவை சிகிச்சை செய்த டாக்டர் நிகில் என்பவர் கூறியதாவது, வயிற்றுக்குள் அந்த பொருட்கள் இருந்ததை அறிந்ததும் எங்கள் மருத்துவக் குழு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து அவற்றை நீக்கியது. சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருக்கிறார். சாதாரணமாக மனிதர்கள் கத்தி ஸ்க்ரூ டிரைவர், ஸ்பூன்களை விழுங்க மாட்டார்கள். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இந்த செயலை செய்திருக்கிறார் என்றார்.