புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் கரோனா பிரிவில் ஆகஸ்ட் 31ஆம் தேதி பணியிலிருந்த மருத்துவர் ஆதேன் குணசேகரனுக்கும், ஆண் செவிலியர் செந்தில் என்பவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் மருத்துவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து சக மருத்துவர்கள் கண்டன பேரணி - Doctors protest in silence
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து சக மருத்துவர்கள் கண்டன பேரணி நடத்தினர்.
இதை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும் மருத்துவர்கள் செப்டம்பர் 2ஆம் தேதி அரை மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் உறுதியளித்ததால் மருத்துவர்கள் கலைந்துச் சென்றனர். இருப்பினும் அவர்கள் நேற்று (செப்டம்பர் 3) கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த விவகாரத்திற்கு இதுவரை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று (செப்டம்பர் 4) ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. ஜிப்மர் உள்ளிருப்பு மருத்துவர்கள் சங்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் முகக் கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைபிடித்தனர்.