கரோனாவுக்கு தீர்வு? - புதிய மருந்து பரிந்துரை
15:29 March 23
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (hydroxychloroquine) என்ற மருந்தை கரோனா வைரஸ் நோய்க்கான மருந்தாக மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ள நிலையில், எட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் மலேரியாவுக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரை செய்துள்ளது.
கோவிட் - 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மட்டும் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலையில் மட்டும் இந்த மருந்தைப் பயன்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்தை பயன்படுத்தும்போது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
- கைகளைக் கழுவுதல், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
- நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.