தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண்ணின் வயிற்றுக்குள் பேன்டேஜ் வைத்து தைத்த அரசு மருத்துவர்கள்! - pregnant

கிழக்கு கோதாவரி: எல்லேஸ்வரம் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவத்துக்காக சிகிச்சை பெற்ற பெண் வயிற்றில் கவனக்குறைவாக பேன்டேஜை வைத்து தைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lady

By

Published : Feb 13, 2019, 1:08 PM IST

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எல்லேஸ்வரம் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு ஷரோன் (24) என்பவர் கடந்த 8ம் தேதி பிரசவத்துக்காக வந்தார். இதையடுத்து, பிரசவம் முடிந்து வீடு திரும்பிய ஷரோனுக்கு மீண்டும் திடீரென வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மருத்துவமனைக்கு வந்த அவரை மருத்துவர்கள் சோதித்துப் பார்த்தனர். அப்போதுதான் மருத்துவமனை செவிலியர்கள் பிரசவத்துக்குப் பின் தவறுதலாக அவரது வயிற்றுக்குள் பேன்டேஜை வைத்து தைத்திருந்தது தெரிய வந்தது.

பின்னர் உடனடியாக அது நீக்கப்பட்டு மீண்டும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கோரியது. பிரசவத்துக்கு பிறகு பெண்ணின் வயிற்றுக்குள் பேன்டேஜை வைத்து தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details