உத்தரப் பிரதேசத்தில் மொராதாபாத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரை அழைத்துச்சென்ற மருத்துவக் குழுவினரின் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த ஒரு கும்பல் கற்களை வீசி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் ஒரு மருத்துவரும், மூன்று மருத்துவ உதவியாளர்களும் காயமடைந்தனர். மருத்துவர்கள் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தையும் அந்தக் கும்பல் சேதப்படுத்தியது.
இந்நிலையில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், ”ஏற்கனவே நாங்கள் கூடுதல் பணிச்சுமையால் மன உளைச்சலில் உள்ளோம். இதுபோன்ற நேரத்தில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வேதனையளிக்கிறது.