"நாங்கள் இந்து ராவ் மருத்துவமனையில் வசிக்கும் மருத்துவர்கள் கடந்த 21 நாட்களாக போராட்டம் நடத்திவருகிறோம். அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ராவணனின்' சிலையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டோம் "என்று மருத்துவர் ஒருவர் கூறினார்.
மேலும், தசரா பண்டிகையின்போது குடும்பங்களுடன் இல்லாமல் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை நாங்கள் நடத்திவருகிறோம். " என்று அவர் கூறினார்.'எங்களுக்கு ஊதியம் கொடுங்கள்', 'ஊதியம் இல்லை என்றால் வேலையும் இல்லை' என்று மருத்துவர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்து ராவ் மருத்துவமனையில் வசிக்கும் மருத்துவர்கள் கடந்த சில வாரங்களாக ஊதியம் வழங்காததை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கரோனா சிகிச்சைக்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த மருத்துவமனைகளின் பட்டியலில் இருந்து அக்டோபர் 13 ஆம் தேதி, என்டிஎம்சி நடத்தும் இந்து ராவ் மருத்துவமனை நீக்கப்பட்டது.
எம்.சி.டி நடத்தும் இந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவரும் கரோனா நோயாளிகள் டெல்லி அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யெந்தர் ஜெயின் அண்மையில் தெரிவித்திருந்தார். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையின் பிற ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு நோட்டீஸ் அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.