ஹரியானாமாநிலம் குருகிராம் (Gurugram) பகுதியில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருபவர் ஹோமியோபதி மருத்துவர் வேத் பிரகாஷ் டாண்டன். இவர் தனது வீட்டிலேயே கிளினிக் நடத்தி வருகிறார். இதற்கிடையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரிடம் மருத்துவம் பார்ப்பதற்காக ஒருவர் வந்துள்ளார்.
அவரைப் பரிசோதனை செய்து மருந்துகள் கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால், அவர் அங்கிருந்து செல்லவில்லை. இந்நிலையில் தனது செல்போன் மூலம் மேலும் இருவரை தொடர்புகொண்டார்.
இதையடுத்து அங்கு வந்த இருவருடன் இணைந்து மருத்துவரின் மனைவி நெற்றியில் துப்பாக்கியை வைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து மருத்துவர் வேத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பட்டப்பகலில் மருத்துவர்கள் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'சித்த மருத்துவம் மூலம் கரோனாவைக் குணப்படுத்த முடியுமா என்பது குறித்த ஆய்வுகள் நடைபெறுகின்றன'