இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் தேதி தேசி மருத்துவர் நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில், அரசு பொது மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இயக்குனர் மோகன் குமார், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
'முழு அர்ப்பணிப்புடன் மருத்துவர்கள் செயலாற்றுகின்றனர்' - சுகாதாரத் துறை அமைச்சர்! - முழு அர்ப்பணிப்புடன் மருத்துவர்கள் செயலாற்றி வருகின்றனர்
புதுச்சேரி: கரோனா சமயத்தில் மருத்துவர்கள் 100 விழுக்காடு தங்கள் பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்துள்ளனர் என சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பாராட்டியுள்ளார்.
!['முழு அர்ப்பணிப்புடன் மருத்துவர்கள் செயலாற்றுகின்றனர்' - சுகாதாரத் துறை அமைச்சர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:43:04:1593594784-tn-pud-02-doctors-day-health-minister-function-7205842-01072020142925-0107f-01325-864.jpg)
இந்த நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், 'இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுலிருந்து மக்களைக் காக்கும் பணியில் இரவு, பகல் பாராது தடுப்புப் பணியில் தீவிரம் காட்டிவரும் மருத்துவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுச்சேரி அரசு மருத்துவர்கள் இச்சமயத்தில் 100 விழுக்காடு தங்கள் பணியை முழுமையான அர்ப்பணிப்புடன் செய்துவருகின்றனர். அதேசமயம் பிற மாநிலங்களை காட்டிலும் புதுச்சேரியிலுள்ள அரசு மருத்துமனைகளில் அனைத்து வகையான மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன' என்றார்.