கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் கரோனா வைரஸ் இருக்கலாம் என்று சந்தேகித்த நோயாளியை, 63 வயது மதிக்கத்தக்க மருத்துவர் ஒருவர், மார்ச் 13 முதல் மார்ச் 16ஆம் தேதி அவரை சந்தித்து வீட்டில் சிகிச்சை அளித்துள்ளார். அந்த நபரின் பரிசோதனை முடிவுகள் வரவிருந்த நிலையில், அவர் திடீரென்று உயிரிழந்தார். அதன்பின்னரே, அந்த நோயாளிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், அவருக்கு வீட்டில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பரிசோதிதத்தில் கரோனா பெருந்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.