தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவாக்சின் தடுப்பூசி பலனளிக்கவில்லையா? - மருத்துவர் விளக்கம் - கோவாக்சின் தடுப்பூசி எப்போது பலனளிக்கும்

ஹைதராபாத்: கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கரோனா பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ள நிலையில், அந்தத் தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து அனில் விஜ்ஜுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவாக்சின்
கோவாக்சின்

By

Published : Dec 6, 2020, 2:36 PM IST

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோவாக்சின் என்ற கரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளன. மருந்தின் மூன்றாம்கட்ட சோதனையில், ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தன்னார்வலராக கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் காரணமாக, தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில், கோவாக்சின் மருந்தின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டு 14 நாள்களுக்குப் பிறகே அதன் பலன் கண்டறிப்படும் என அனில் விஜ்ஜுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் நேற்று தெரிவித்துள்ளார். அம்பாலா பொது மருத்துவமனை மருத்துவர் குல்தீப் சிங் இது குறித்து மேலும் கூறுகையில், "முதல் டோஸ் போட்டுக் கொண்ட 15 நாள்களில் எந்தத் தடுப்பூசியும் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்காது.

நவம்பர் 20ஆம் தேதி, விஜ்ஜுக்கு முதல் டோஸ் அளிக்கப்பட்டது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க குறைந்தபட்சம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையாவது அளிக்க வேண்டும். அதற்கு, 42 நாள்கள் தேவைப்படும். தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு 15 நாள்களே ஆகின்றன" என்றார்.

ஹரியானாவில் உள்ள பண்டிட் பகவத் தயால் சர்மா முதுகலை மருத்துவக் கல்லூரியில் மருந்து கண்காணிப்பாளராகப் பணியாற்றிவரும் மருத்துவர் புஷ்பா தஹியா இது குறித்து கூறுகையில், "முதல் டோஸ் போட்டுக்கொண்ட 42 நாள்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிவதை 42 நாள்களுக்கு கட்டாயம் பின்பற்ற வேண்டும். 42 நாள்களுக்கு பிறகே, நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும்" என்றார்.

கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்து பாரத் பயோடெக் நிறுவனம், "தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டு 14 நாள்களுக்குப் பிறகே அது உடலில் பலனை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details