தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மருத்துவர் கோரிக்கை - 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மருத்துவர் கோரிக்கை

டெல்லி: மருத்துவர்கள், மருத்துவத் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பெண் மருத்துவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

Doctor in SC
Doctor in SC

By

Published : May 28, 2020, 1:50 AM IST

கோவிட்-19 சுகாதாரப் பணியாளர்களுக்கான மையத்தின் புதிய நிலையான இயக்க முறைமை குறித்து, உச்ச நீதிமன்றத்தில் பெண் மருத்துவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 'மருத்துவர்களுக்குப் போதுமான பாதுகாப்புக் கவசங்கள் வழங்க வேண்டும் எனவும், இந்த கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவும், கரோனா நோயாளிகளைக் குணப்படுத்தவும் மருத்துவர்கள் தான் அதிகம் போராடி வருகின்றனர்.

ஆனால், அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பை ஏன் அரசாங்கம் வழங்கவில்லை' என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் 'அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்குவதோடு, மருத்துவத்துறையில் பணி புரிபவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதலைக் கட்டாயப்படுத்த வேண்டும்'எனவும் பெண் மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details