தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு மருத்துவர் தற்கொலை - crime news in telangana

ஹைதராபாத்: மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

doctor commits suicide in telangana
doctor commits suicide in telangana

By

Published : Mar 10, 2020, 10:44 AM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மேட்ச்சல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் 43 வயது நிர்வாக இயக்குநர் தனது வீட்டில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அதிகாலையில் அவரது மனைவி வீட்டில் இல்லாதபோது, மருத்துவர் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டுள்ளார். முதல்நாள் இரவு அவரது மனைவி உறவினர் வீட்டுக்குச்சென்றுள்ளார்.

காலையில் நீண்ட நேரமாக கணவருக்கு போன் செய்தும் அவர் பதிலளிக்காததால் உறவினர் ஒருவரை அழைத்துக்கொண்டு உடனடியாக வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மருத்துவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

தற்கொலை குறித்து எந்த ஒரு குறிப்பும் கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமரை திட்டிய முதியவருக்கு சிறை

ABOUT THE AUTHOR

...view details