”நாட்டில் குழந்தைகளின் உளவியல் உருவாக்கம்” என்ற தலைப்பிலான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) அமைப்பின் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,
ஆறு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் உடல் நலம், பாதுகாப்பு, ஊட்டச்சத்து, கற்றல் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் போதிய அளவு கவனம் செலுத்த வேண்டுமென யுனிசெஃப் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறுவர் சிறுமியரின் உளவியல் வளர்ச்சி, ஆறுவயதில் அபரிமிதமான வேகத்தை எட்டுகிறது. மேலும், ஒரு குழந்தைக்கு மூன்று வயது நிறைவடையும் சமயம், அதனுடைய சிந்திக்கும் ஆற்றல் அதிவேகமாக வளச்சியடைகிறது. எனவே, கடுமையான மன அழுத்தம் நிலவும் தற்போதைய சூழலில், மழலைச் செல்வங்களின் முழுமையான, ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் தீவிர கவனம் செலுத்துவது அவசியம்.
தற்போது நிலவும் கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், பெற்றோரும் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த பேரச்சத்திலும் கடும் உளைச்சலிலும் உள்ளனர் என்பதே யதார்த்தம். இருப்பினும், இதுபோன்ற சிக்கலான காலகட்டத்தில், பெற்றோர் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை, சுகாதார வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் வாயிலாக, தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், உறவினர் மற்றும் சுற்றத்தாரின் பாதுகாப்பையும் பராமரிக்க வேண்டும். மிக மோசமான இந்த நிலைமையிலிருந்து நாம் மீண்டுவர இதுவே சிறந்த வழியாகும்.
கரோனா கோர தாண்டவமாடும் இன்றைய சூழலில், சிறார் நலனைப் பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கிய விரிவான அறிக்கையை யுனிசெஃப் அண்மையில் வெளியிட்டுள்ளது. “நாட்டில் ஆரம்பகட்ட குழந்தைப்பருவ வளர்ச்சி” என்னும் அந்த அறிக்கை, நோய்த்தொற்று காலத்தில் அணைத்து தரப்பினரின் உடல் நலன், பாதுகாப்பு முக்கியத்துவம் அளிக்கும் அதே சமயம் குழந்தைகளுக்கு, குறிப்பாக, ஆறு வயதிற்குற்பட்ட சிறாரின் நலனும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டுமென வலியுறுத்துகிறது. பெற்றோர், முதியோர், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் வயோதிகரைப் பராமரிப்போர் என அனைவரின் பாதுகாப்பும் இன்றியமையாதது. கரோனா பேரிடர், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு மிகப் பெரிய சவாலாக எழுந்துள்ளது. வைரஸ் தொற்று மற்றும் அதன் தாக்கம் குறித்து சிறுவர் சிறுமியர் அதீத கவலை அடைந்துள்ளனர். பாலர் பள்ளிகளும், பள்ளிகளும் முடப்பட்டுள்ளன, எப்போது பள்ளிகள் திறக்கும் இயல்பு நிலை திரும்பும் என ஏக்கத்துடன் உள்ளனர். இதனால், சிறாரின் அன்றாட வாழ்வே தலைகீழாக புரட்டிப் போடப்பட்டுள்ளது. அவர்களின் நடவடிக்கைய முடக்கியுள்ள மேலதிகமான தீவிர கட்டுப்பாடுகளால், அவர்கள் வேறுவழியின்றி உள்ளனர்.
இத்தகைய சூழலில், குழந்தைகளிடம் காட்டப்படும் நேர்மறையான அணுகுமுறையும் தகுந்த கண்காணிப்பும், உணர்ச்சிபூர்வமான, உளவியல்பூர்வமான பிரச்னைகளை எளிதாக கையாள உதவும். எனவே, வைரஸ் பற்றிய தெளிவான தகவல்களை, குழந்தைகளுக்கு தெரிவிப்பதுடன், என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்பதையும் தவறாமல் கற்றுக்கொடுத்து, கரோனா தொற்றுக்கு எதிரான போருக்கு அவர்களை தயார்படுத்த வேண்டும், என யுனிசெஃப் அறிக்கை கூறுகிறது. மேலும், குழந்தைகள் தனிமையில் இருப்பதை தவிர்த்திட அறிவுறுத்துவதுடன், பெற்றோர் அவர்களுடன் நேரத்தை செலவிடுவது அவசியம் தேவை. எந்த அளவு பிள்ளைகளுடன் பெற்றோர் சேர்ந்திருக்க முடியுமோ அந்த அளவு அது நன்மை பயக்கும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் உதவும். பெற்றோரும் மற்றவர்களும் கடைபிடிக்கவேண்டிய ஐந்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை, யுனிசெஃப் அறிக்கை பரிந்துரைக்கிறது.
1) உடல் நலம்
சிறார் மற்றும் குழந்தைகள் நலனில் கூடுதல் அக்கறையுடன் கவனம் செலுத்துங்கள். சுத்தத்தையும் சுகாதாரத்தையும் தவறாமல் கடைபிடித்து, நோய்த் தொற்றுக்கு இடம் கொடுக்காமல் பாதுகாப்புடன் இருங்கள். நோய்வாய்ப்பட்டு உடல் நலம் குன்றினால், உடனடியாக தகுந்த தரமான சிகிச்சை அளியுங்கள்.
2) உணவும் ஊட்டச்சத்தும்