டெல்லி:ஜனக்புரி மேற்கு-ஆர்.கே. ஆஸ்ரம் மார்க் மெட்ரோ வழித்தடத்தின் முதல் தூண் வெற்றிகரமாக நிறுவப்பட்டது.
கரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலேயே வேலையாட்களைக் கொண்டு இந்தக் கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டன. இச்சூழலில் கேஷோபூர் எனும் இடத்தில் பூமிக்கு அடியில் இந்தத் தூணானது நிறுவப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜனக்புரி மேற்கு-ஆர்.கே. ஆஸ்ரம் மார்க்கில் 28.92 கிலோமீட்டர் தொலைவிற்கான மெட்ரோ வழித்தடத்தில், பூமிக்கு அடியில் 4ஆம் கட்ட கட்டுமானப் பணி ஜூலை 17ஆம் தேதி தொடங்கப்பட்டது. கிருஷ்ணா பார்க் விரிவாக்க மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் பூமிக்கு அடியில் இப்பணி தொடங்கியது. ஜனக்புரி மேற்கு மற்றும் கேஷோபூா் இடையே 1.4 கிலோமீட்டா் தூரத்திற்குப் பாதாள துளையிடும் இயந்திரங்கள், சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.