நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடரின் ஒன்பதாம் நாள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப்.23) நடைபெற்றது. இதில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் பேசினார்.
என்எல்சி ஊழியர்களுக்கான ஈபிஎஃப் பென்ஷன் தொகையை வழங்க வேண்டும் - திமுக எம்பி சண்முகம் - DMK Shanmugam Spoke about NLC Pension
டெல்லி : ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஈபிஎஃப் பென்ஷன் தொகையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
dmk-shanmugam-specch-in-rajya-sabha
அப்போது ''1995ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியர்களுக்கு இதுநாள் வரை ஈபிஎஃப் பென்ஷன் தொகை வழங்கப்படவில்லை. நீண்ட நாள்களாக இந்தக் கோரிக்கைக்கு உரிய பதில் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மத்திய அரசு தலையிட்டு விரைவில் ஊழியர்களுக்கு பென்ஷன் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க:மக்களவையையும் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்