தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜிஎஸ்டி நிதியிலிருந்து குடும்பத்திற்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும்- முதலைமைச்சரிடம் திமுக கோரிக்கை! - முதலைமைச்சரை சந்தித்த திமுக சிவா

புதுச்சேரி: கரோனா ஊரடங்கில் மக்கள் வருமானமின்றி தவித்துவருக்கின்றனர். அவர்களுக்கு ஜிஎஸ்டி நிதியிலிருந்து குடும்பத்திற்கு 5000 ரூபாய் வழங்கவேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமியிடம் திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி முதலமைச்சரை சந்தித்த திமுகவினர்

By

Published : Jun 16, 2020, 3:05 AM IST

புதுச்சேரி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா, அம்மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளிததார்.

அந்த மனுவில், "உலகையே அச்சுறுத்தும் கரோனா தொற்றிலிருந்து புதுச்சேரி மக்களை நாம் காப்பாற்றுகின்ற இந்த நேரத்தில், தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கால் மிகவும் அல்லல்படும் மக்கள் வேலையின்றியும், தன் பிள்ளைகளுக்கு நல்ல உணவு கொடுக்கமுடியாமலும் தள்ளாடிவருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் நமக்குள்ள நெருக்கடியில் பணம் இல்லை என்று சொல்லாமல், மத்திய அரசு கொடுத்துள்ள GST பணத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாயும், இருபது கிலோ அரிசி உள்ளிட்ட மளிகை தொகுப்பை கொடுக்க அன்புடன் கோருகிறேன்.

கடந்த 29ஆம் தேதி கண்டிப்பாக மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு தருவதாக கூறிய அமைச்சர், இதுவரை அதுகுறித்து என்னவென்று சொல்லவில்லை, தாங்கள் உடனடியாக இதில் உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details