தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்! - புதுச்சேரி

புதுச்சேரி: ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்க தடையை ஏற்படுத்தும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

dmk
dmk

By

Published : Feb 27, 2020, 6:58 PM IST

புதுச்சேரி மாநில மக்களுக்கு இலவச அரிசி வழங்கத் தடையாக இருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து திமுக சார்பாக பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக அமைப்பாளரும், உருளையன்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சிவா தலைமை தாங்கினார்.

மாநில அரசு மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச அரிசி, உணவுப் பொருள்களை வழங்க முயன்றாலும், அதற்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெரிய தடையாக இருப்பதாகவும், இந்த நிலை மாறி புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர். இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

இதையும் படிங்க: 'மதத்தைக் கொண்டு தமிழ்நாட்டைப் பிரிக்க முடியாது’ - நாராயணசாமி

ABOUT THE AUTHOR

...view details