தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆயுஸ் அமைச்சகத்திடம் திமுக எம்பி வில்சன் கேட்ட கேள்விகளும், கிடைத்த பதிலும்! - திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி

மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன், கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பாக ஆயுர்வேத அமைச்சகத்திடம் கேட்ட கேள்விகளுக்கு ஆயுஸ் அமைச்சகம் எழுத்துப்பூர்வமான பதில்களை அளித்துள்ளது.

MP Wilson question to ayush ministry
ஆயுஸ் அமைச்சகத்திடம் திமுக எம்பி வில்சன் கேட்ட கேள்விகளும், கிடைத்த பதிலும்

By

Published : Feb 9, 2021, 10:48 PM IST

டெல்லி:மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன், கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பாக ஆயுர்வேத அமைச்சகத்திடம் கேட்ட கேள்விகளுக்கு ஆயுஸ் அமைச்சகம் பதில்களை அளித்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் சித்தா மருந்துகள் பயன்படுத்துவதை அரசாங்கம் ஊக்குவித்ததா? என்று திமுக எம்பி வில்சன் கேட்ட கேள்விக்கு, கோவிட்- 19 தடுப்பு நடவடிக்கைகளில் சித்தா மருந்துகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்பட்டது என்றும் விரும்பும் மக்களுக்கு ஆயுஸ் குடிநீர் கொடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சஞ்சீவினி எனும் செல்போன் செயலி மூலம் ஆயுஸ் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நபர்களின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்த அமைச்சகம், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் தொடர்ந்து உரையாடிவந்ததோடு, தடையில்லாமல் நோயாளிகளுக்கு மருந்து கிடைப்பதை உறுதி செய்ததாகவும் தெரிவித்தது.

கோவிட்-19 தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்காக தமிழ்நாடு மாநிலத்திற்கு நிதி ஏதும் ஒதுக்கப்பட்டதா? அவ்வாறு ஒதுக்கப்பட்டிருப்பின் எவ்வளவு ஒதுக்கப்பட்டது, ஒதுக்கப்படவில்லையெனில் அதற்கான காரணம் என்ன? என வில்சன் எம்பி கேட்ட கேள்விகளுக்கு, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு 80 லட்சம் ரூபாய் ரூபாய், தேசிய சித்தா நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் என 1 கோடியே 63 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதாக பதிலளித்துள்ளது.

தமிழ்நாட்டில், கரோனா தொடர்பாக நான்கு மருத்துவ பரிசோதனைகள் சென்னையில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும் - திருச்சி சிவா வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details