நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை - மாநிலங்களவை
டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.
siva
இந்த நிலையில், இன்று மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டி தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.